கோடிக்கு மேல் வந்த மின் கட்டணம்
கோடிக்கு மேல் வந்த மின் கட்டணம்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில்,வசிப்பவர், பி.ஆர்.குகா.இவர் மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் வாரியம் சென்ற போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. 3,800 கோடி ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்தது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவரது வீட்டுக்கான மின் இணைப்பையும் ஜார்க்கண்ட் மின் வாரியம் துண்டித்து விட்டது. இது குறித்து குகா கூறுகையில்.எங்களது வீட்டில் மூன்று அறைகள் ,மூன்று விளக்குகள் , ஒரு டிவி மட்டும் தான் உள்ளது. அவ்வாறு இருக்க எப்படி இப்படி மின்கட்டணம் உயர்ந்து வரும்.இதனை மின்வாரியைக்கு புகாராக அளித்துள்ளார் குகா.

Comments
Post a Comment