வேர்க்கடலை அறுவடை செய்யும் இயந்திரம் கண்டுபிடித்த இலங்கை இளைஞர்
வேர்க்கடலை அறுவடை செய்யும் இயந்திரம் கண்டுபிடித்த இலங்கை இளைஞர்
இலங்கையில் 28 வயதான கே.ஜீ.சந்திகஜயந்த சேனாதீர என்ற இளைஞர் அறுவடை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். பயன்படுத்த முடியாத பொருட்களை கொண்டு புதிய பொருட்களை கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர். அப்படிப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் இந்த இயந்திரத்தை அவர் தயாரித்துள்ளார். இதன்மூலம் மிகவும் இலகுவாக வேர்க்கடலை அறுவடை செய்ய முடியும் என்று கூறுகிறார்.
ஒரு ஏக்கர் வேர்க்கடலை அறுவடை செய்வதற்கு 10 பேர் தேவைப்படுகின்றனர். இதற்கு அதிகமாக செலவும் ஏற்படுகிறது. செலவை குறைத்து வருமானத்தை பெருகுவதற்கு ஒரு புதிய இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இது குறித்து சிந்தித்த பின்னரே இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டதாக அந்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இயந்திரத்தின் ஊடாக சுத்தமான வேர்க்கடலைகளை பெற்றுக் கொள்ளலாம். மணல் அகற்றுவதற்கும் அந்த இயந்திரத்தினால் முடியும். இந்த இயந்திரத்தில் இரண்டு பேர் வேலை செய்ய முடியும். உதவிகள் கிடைத்தால் இது போல் பல இயந்திரங்களை உருவாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்..

Comments
Post a Comment