மனைவியுடன் கணவன் கட்டாய உறவு ,தவறு இல்லை : மத்திய அரசு WRITTEN BY THEMALAR

மனைவியுடன் கணவன் கட்டாய உறவு ,தவறு இல்லை : மத்திய அரசு

பெண்களுக்கு சார்பாக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மோனிகா அரோரா என்பவர், கணவன் மனைவியுடன் கட்டாயமாக உறவு வைப்பதை குற்றமாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட் விசாரித்தபோது , மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், வலுக்கட்டாயமாக உறவு கொள்ள கணவர்களுக்கு கல்யாணம் ஒரு கருவியாக பயன்படுத்தப்படும். இதனை எதிர்த்து ஆண்கள் சங்கம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. அதில், 375வது பிரிவு சட்டப்படி, கணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்கினால், அப்பாவி கணவர்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பழிப்பு, பாலியல் தொந்தரவு என பொய் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மனைவியுடன் கட்டாய உறவு வைப்பதை குற்றமாக அறிவிக்கும் திட்டமில்லை. மனைவியுடன் கணவன் கட்டாய உறவு வைப்பதை குற்றம் என சட்டமாக்கினால், அது திருமண பந்தம் சீர்குலைப்புக்கும், கணவர்களை துன்புறுத்துவதற்கும் பயன்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்