நடிகர் அல்வா வாசு உடல் நலகுறைவால் காலமானார்

நடிகர் அல்வா வாசு உடல் நலகுறைவால் காலமானார்

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன், சினிமா  மீது கொண்ட அதீத பற்றின் காரணமாக சென்னைக்கு வந்தவர் மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றினார். வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்தாலும் சத்யராஜின் அமைதிப்படை படம் தான் அவரை பிரபலமாக்கியது.தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.கல்லீரல் முழுமையாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான முறையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்