குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது

குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது

அசாம் மாநிலம் ஹைலாக்கன்டி மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளியில் 46 வயதுடைய பைசுதீன் லஷ்கார் என்ற 10-ம் வகுப்பு ஆசிரியர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் வகுப்பறையில் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனை புகைப்படம் எடுத்தவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வைரலாக பரவியது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த காவல்துறையினர் விசாரணை செய்தனர் . விசாரணையில் அந்த மாணவியை ஆசிரியர் பைசுதீன்லஷ்கார் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அவ்வப்போது வகுப்பறையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சக மாணவியே புகைப்படமாக எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கலவல்துறைனர் கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்