சுவாமி தயானந்த் கல்வி அறக்கட்டளையின் உதவித்தொகை
சுவாமி தயானந்த் கல்வி அறக்கட்டளையின் உதவித்தொகை சுவாமி தயானந்த் கல்வி அறக்கட்டளையின் உதவித்தொகை
சுவாமி தயானந்த் கல்வி அறக்கட்டளை, பொறியியல், கட்டடக்கலை, மருத்துவம், மென் பொறியியல் மற்றும் மருந்தியல் ஆகிய துறைகளில் படிக்கும் சிறந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஐ.ஐ.டி., அல்லது என்.ஐ.டி.யில்., ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மருத்துவம், கட்டடக்கலை மற்றும் மருந்தியல் போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில், சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். 12ம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் முதல் ஒரு லட்சம்வரை வழங்கப்படும். 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31 தேதி.
www.swamidayanand.org

Comments
Post a Comment