குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் ஒரு ரூபாய் கிளினிக்

குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் ஒரு ரூபாய் கிளினிக்

இந்திய ரயில்வே,ரயில்வே நிலையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், சிறந்த முறையில் பராமரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ரயிலில் பயணம் மேற்கொள்வோர் உடல்நலனை கருத்தில் கொண்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையிலான கிளினிக்குகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.கிழக்கு ரயில்வே பகுதிகளில் அமைக்கப்படவுள்ள கிளினிக்கில் ஒரு ரூபாய் கிளினிக்' என பெயரிடப்பட்டுள்ளது. அதாவது மருத்துவரின் கட்டணமாக ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும். ரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக செய்வதுடன், சர்க்கரை பரிசோதனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். இசிஜி ரூ.50ல் எடுக்கலாம். இதுபோன்று குறைந்த கட்டணத்தில் பரிசோதனை, சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த கிளினிக்குகள் இயங்கவுள்ளன.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்