ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா
ஹச் 1 பி விசா விவகாரம் - அமெரிக்கா
அமெரிக்க பணிகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பதனடிப்படையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டவர்களை குறிப்பாக இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.H1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை மாற்றியமைத்துள்ள நிலையில், முதுகலை படிப்பு படித்தவர்கள் மட்டுமே, இனி H1B விசா பெற விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை இந்தியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
H1B விசா கோரி, 2015ம் ஆண்டில் 2.75 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்க அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் நடப்பு ஆண்டில் H1B விசா கோரி, விண்ணப்பித்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக சரிந்தது. முன்னணி நிறுவனங்களில் பெரும்பாலான பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே இருந்து வருகின்றன.குறைந்தபட்ச சம்பளம் என பல்வேறு நெருக்கடிகளால் H1B விசா கோரும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் டிகிரி கட்டாயம் என்ற அறிவிப்பு, இந்தியர்களை கதிகலங்க செய்துள்ளது.

Comments
Post a Comment