ஐ.பி.எஸ் மனைவி குழந்தையுடன் சிறைவாசம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைசேர்ந்தவர், ஷபீர் கரிம், 29. இவர், 2014ல், அகில 

இந்திய அளவில், 112வது இடத்தில் வெற்றி பெற்று, ஐ.ஏ.எஸ்., பணிக்கு தேர்ச்சி பெற்றார். எனினும், அவர், ஐ.பி.எஸ்., பணியை தேர்வு செய்து, 2016ல், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக, பயிற்சி பெற்று வந்தார். மனைவிக்காக மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயன்ற அவர், அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, பெண்கள் மேல்நிலை பள்ளியில், மெயின் தேர்வு எழுதியபோது, புளூ டூத் வழியாக காப்பி அடித்து சிக்கினார். இவரை, எழும்பூர் போலீசார், நேற்று முன் தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நேற்று, அவரது மனைவி, ஜாய்சி மற்றும் கூட்டாளி, ராம்பாபு ஆகியோரை கைது செய்தனர். ஐதராபாத்தில் இருந்து இன்று காலை புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்ட ஜாய்சி, ஒன்றரை வயது குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்