திருப்பதி லட்டு விலை உயரப்போகிறதாம் !

திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு -பிரசாத்தின் விலை இன்னும் சில நாட்களில் உயரப்போகிறது.இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
http://themalar.com/index.php/component/k2/item/1082-2017-11-27-10-54-57

இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய ரூ.37 செலவு ஆகிறது எனவும் சலுகை விலையில் லட்டு வழங்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. லட்டு விலையை உயர்த்தினால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் என்பதால் இதுவரை லட்டு விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் லட்டு விலையை எவ்வளவு உயர்த்துவது என ஆலோசித்து, அரசு அனுமதியுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்