மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர்

மாணவனின் ஜீன்ஸ் 'பேன்ட்'டை கத்தரித்த ஆசிரியர்

உத்தர பிரதேசத்தில் கான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவன், அனுஜ் குமார். இந்த பள்ளியில் தினமும், மாணவர்கள் சீருடை அணிந்து வர வேண்டும்.
சீருடை அழுக்காக இருந்ததால், மாணவன் அனுஜ், சமீபத்தில், சீருடை அணியாமல், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, பள்ளிக்கு சென்றான். இதை பார்த்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், மாணவனின் பேன்ட்டை, கத்திரிக் கோலால் கத்தரித்தார்.
அப்போது, மாணவனின் இரண்டு கால்களிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. அதன்பின், அனுஜை, பள்ளி காவலாளியுடன் வீட்டுக்கு அனுப்பினார்.கால்களில் ரத்தக் காயத்துடன் வந்த மகனை பார்த்து, அனுஜின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரை பதிவு செய்த போலீசார், பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்து, விசாரணைக்குப் பின் விடுவித்தனர். மாணவனின் கால்களில் ரத்தக் காயம் ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

http://themalar.com/index.php/component/k2/item/1048-2017-11-19-06-56-35

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்