எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல்
எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள்: ராகுல்
குஜராத் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் காங்., பா.ஜ. வும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அமரேலியில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு சென்ற ராகுல் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.அதில் ராகுல் இந்து அல்லாதவர் என பதிவிடப்பட்டிருந்தது. இது பா.ஜ.வின் வேலை என காங். குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்பேசியது, சோம்நாத் கோயிலுக்கு சென்ற நான் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்து மட்டுமே போட்டேன். ஆனால் பா.ஜ.வினர் தான் மத பிரச்னையை குறிப்பிட்டு விஷமம் செய்துள்ளனர். மதத்தின் மீதான நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். நாங்கள் மதத்தை வைத்து வியாபாரம் செய்யவில்லை. நான் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள் தான் என பேசினார்.

Comments
Post a Comment