திருமணம் செய்ய மறுத்த காதலன்: வீட்டிற்கு அழைத்து காதலி செய்த செயல்
டெல்லி மங்கள்புரி பகுதியை சேர்ந்தவர் ரவி(35). இவர் இளம் பெண் ஒருவரை நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு விருப்பம் இல்லை.இந்நிலையில் ரவிக்கு தொடர்பு கொண்ட அப்பெண்ணின் உறவினர் ஒருவர் உடனடியாக வீட்டிற்கு வரும் படி கூறியுள்ளார். இதனால் அங்கு சென்ற ரவியிடம், காதலி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரோ நம் காதலை பற்றி தன்னுடைய வீட்டில் பேசினேன், திருமணம் செய்து வைக்குமாறு கூறினேன். ஆனால் தங்கள் வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அப்பெண் உடனடியாக அவரை அருகில் இருந்த குளியலறைக்குள் தள்ளி, அவரின் மர்ம உறுப்பை கத்தியை வைத்து வெட்டியுள்ளார். இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளான அவர் வலி தாங்காமுடியாமல் வெளியில் ஓடி வந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் அப்பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதைத் தொடர்ந்து அப்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment