மலேசியாவில் பாம்புக் கோவில்
பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், 18–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ' சூர் சோ காங்' என்ற மன்னரின் நினைவாக இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் வளர்த்து வந்தவர் அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.காங் மன்னர், 65 வயதில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோவில் மன்னரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. இதை புத்த துறவி ஒருவர் கட்டி முடித்திருக்கிறார்.பாம்புகளின் படையெடுப்பால் பாம்புக் கோவிலாக மாறிவிட்டது. அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.
கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு பிரமாண்ட மண்டபம் இருக்கிறது. அதில் அமர்ந்தபடி தான் வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வழிபடுகையில் அவர்களை நோக்கி பாம்புகள் ஊர்ந்து வருகிறது. அப்படி நிகழ்ந்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.கோவிலுக்கு பின்புறத்தில் இருக்கும் பாம்பு குளத்திற்கு பக்தர்கள் செல்கிறார்கள். அதில் கொடிய விஷமுள்ள பாம்புகள் இந்த நீச்சல் குளத்தில் பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் விஷம் நீக்கப்பட்ட பாம்புகள். பக்தர்களை பார்த்து இன்று வரை பாம்புகள் சீறியது இல்லை.அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.காங் மன்னரின் பிறந்த நாள் தான், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் விஷப் பாம்புகளும் குவிவதுதான் ஆச்சரியம்.

Comments
Post a Comment