ஜாலியன் வாலாபாக்கில் கொள்ளை



பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ளது ஜாலியன் வாலாபாக் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூறும், ஓர் முக்கிய இடம் ஆகும். இங்குள்ள கிணற்றில் பலர் சுதந்திர போராட்டத்தின் போது இறந்துள்ளனர்.இதனை நினைவு கூறும் வகையில் அந்த கிணறு கிரில் போட்டு மூடியுள்ளனர்.மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அங்கு வரும் மக்கள் கிணற்றின் உள்ளே ஏராளமான நாணயங்கள் மற்றும் பணத்தை போட்டு விட்டு செல்கின்றனர்.அந்த கிணற்றின் மீது இருந்த கிரிலை உடைத்து விட்டு சிலர் கிணற்றில் இருந்த பணம் மற்றும் நாணயங்களை எடுத்து சென்று விட்டனர். இது குறித்து அந்த பகுதியின் காவலாளி போலீசில் புகார் அளித்துள்ளார். ஜாலியன்வாலாபாக் பகுதியை சுற்றி ஏராரளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு இருந்து வந்த சிலர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Published in அண்மைச் செய்திகள்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்