கற்றது BE.........!
மிக உக்கிரமான ஒரு வெயில்பொழுதில் டிகிரி சர்ட்பிட்டுகளை கையில் தூக்கிக்கொண்டு பெல்ட் இறுக்கப்பட்ட கால்சட்டையுடன் சென்னையின் வெயிலேறும் சாலைகளில் நடத்தல் என்பது மிக மிகக் கொடிது. ஈவு இரக்கமில்லாமல் வெயில் மேனி தாக்கும். குட்டி பெட்டிக்கடையில் ஓசி தண்ணீர் குடிக்க டம்ளர் தூக்கினாலும் கடைக்காரன் ஒரு மாதிரி பார்ப்பான். இத்துணூண்டு மிடறுக்கு நீர்ச்சண்டை புரிவான். முடிந்தமட்டும் எச்சில் கூட்டி முழுங்கிக் கொள்ள வேண்டும். பின் அலைய வேண்டும். அலையோ அலையென்று அலைய மட்டுமே வேண்டும். அலையும் தெருக்களிலெல்லாம் நம் அகத்தை பிரதி எடுத்தது போல வளர்ந்த சிகையுடன் பைத்தியங்கள் சுற்றுவது நம் கண்களுக்குக் கிட்டும். நடந்து நடந்து நேர்முகத் தேர்வறைக்கு சென்றால் பிரபல நடிகரின் முதல் நாள் படக்காட்சி மாதிரி கூட்டம் நிற்கும். ஒரு சக்கர தொழிற்சாலையின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட நான் தட்டுத் தடுமாறி இரண்டாம் சுற்றுக்கு போனேன். குளிரூட்டப்பட்ட அறையில் கைக்குட்டையால் வியர்வையை துடைத்துக்கொண்டிருந்த போது 'நீங்கள் இறுதியாக என்ன திரைப்படம் பார்த்தீர்கள்' என்றார் கேள்வியாளர். மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்திற்கே போயிருந்த நான் கடைசியாக பார்த்த இரண்டு படங்களின் பெயர்களையுமே சொல்ல தடுமாறினேன். காரணம் நான் பார்த்திருந்த படங்கள் அப்படி.. வாலு மற்றும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க. இதைச் சொன்னால் அடுத்த கேள்வியிலேயே அந்த படத்தின் கதை என்ன என்று கேட்பார் என்பது எனக்கு தெரிந்திருந்தது. அதை விளக்க முற்பட்டால் கேள்வியாளர் மிரளுவார் என்ற ஒரே காரணத்துக்காக தவிர்த்தேன். ஆதலால், கேள்வியாளரின் அலைப்பேசியில் ரிங்டோனாக ஒலித்த படப்பெயரையே நெஞ்சு நிமிர்த்தி சொன்னேன். அவரும் 'பாகுபலியின் கதை என்ன' என்றார். விளக்கினேன். பின் படிக்கும் புத்தகங்களைக் குறித்து கேட்டார். இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்தே போனேன். அது ஒன்றே கண்ணாடிக் கதவுக்கு வெளியே என்னை அனுப்ப அவருக்கு போதுமானதாக இருந்தது. இந்த இடத்தில் யாருமே படிக்காத (எழுதவே படாத) ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புத்தகத்தின் பெயரையே புன்சிரிப்போடு புளுகியிருக்க வேண்டும். 'சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன் சிங்கைப் பிடிக்காது' என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதையை ஆர்வக்கோளாறில் சொல்லவே அந்த இளம் பெண் கேள்வியாளர் குபீர் சிரிப்பு சிரித்து விட்டார். தெருவோடு நடந்து பேருந்தில் ஏறியபோதுதான் என்னோடு சேர்த்து தேர்வாகாமல் வெளியேறப்பட்ட இரண்டு பேர் பேருந்தில் ஏறுவதை கவனித்தேன். ஒருவன் சென்னைவாசி, பேச்சு காட்டிக் கொடுத்தது. இன்னொருவன் எலும்பில் செல்லோடேப் கொண்டு தோல் ஒட்டி வைத்த அளவுக்கு ஒல்லியன். கடுக்கண் அணிந்து நாடியில் சொச்ச அளவு தாடி வைத்திருந்தான். இதற்காகவே இவனை வெளியேற்றியிருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்த போது கடுக்கண்காரனின் கைப்பேசி ஒலித்தது.
"ம்ம்..சொல்லுமா..இண்டர்வியூலாம் செலெக்ட் ஆய்ட்டேன் மா.. நாளக்கு எதோ பிசிகல் டெஸ்டாம், அதான் என்ன பண்ணன்னு தெரில, நான் வேற வீக்கா இருக்கேன்"
சென்னையின் வெயிலுக்கு இந்த நகைச்சுவை இதமாகத்தான் இருந்தது.
"ம்ம்..சொல்லுமா..இண்டர்வியூலாம் செலெக்ட் ஆய்ட்டேன் மா.. நாளக்கு எதோ பிசிகல் டெஸ்டாம், அதான் என்ன பண்ணன்னு தெரில, நான் வேற வீக்கா இருக்கேன்"
சென்னையின் வெயிலுக்கு இந்த நகைச்சுவை இதமாகத்தான் இருந்தது.
சென்னையின் பல்வேறு தெருக்களில் பொறியியல் படித்ததை மறைத்துக்கொண்டு டிப்ளமோ தகுதியையும், ப்ளஸ் 2 தேர்ச்சியையும் மட்டும் வைத்துக்கொண்டு வேலை தேடுபவர்களும், வேலை பார்ப்பவர்களுமே அதிகம்.. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு வேலை கூட, அவர்களுக்கு அளிக்கும் ஒரு முன்னுரிமை கூட பொறியியல் படித்தவர்களுக்கு இல்லை என்பதே வேதனை கலந்த உண்மை.. BE யா, இங்க வராத ஓடு என்று வாட்ச்மேன்கள் சுழற்றும் பிரம்பு இந்த சமூகம் ஒரு பொறியியல் பட்டாதாரிக்கு கொடுக்கும் அடி..
சரி படித்ததற்கு வேலை இல்லையென பிடித்த துறையின் கதவை தட்டினால் தட்டுங்கள் திறக்கப்படுவதில்லை என்ற பதிலே கேள்வியாக வருகிறது. தினமலர் நிறுவனத்தின் எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்த போது அந்த கேள்வியாளர் கேட்ட இது. 'தம்பி B.E முடிச்சிட்டு நீங்க ஏன் இங்க வர்ரீங்க'. இதில் என்னவென்றால் கேள்வியாளரின் பையன் B.E படிக்கவே 'தம்பி B.E படிச்சா வேல கெடைக்காதோப்பா' என மிரண்டு போய் நான் அவரிடம் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறேன் என்பதையே மறந்தவராய் அவர் என்னிடம் விசாரிக்கத் தொடங்கி விட்டார்..
ஒரு வருடம் வேலை கிடைக்காமல் அடுத்த வருடம் போனால் காத்திருக்கிறது ஒரு கேள்வி, லாஸ்ட் ஒன் இயர் என்ன பண்ணீங்க என்பது தான்.. சாக்கடைக்குள் விழப்போனவனை சாத்தான் காப்பாற்றியது மாதிரியான கேள்விதான் இது.. என் கவிதை ஒன்று
சரி படித்ததற்கு வேலை இல்லையென பிடித்த துறையின் கதவை தட்டினால் தட்டுங்கள் திறக்கப்படுவதில்லை என்ற பதிலே கேள்வியாக வருகிறது. தினமலர் நிறுவனத்தின் எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்திருந்த போது அந்த கேள்வியாளர் கேட்ட இது. 'தம்பி B.E முடிச்சிட்டு நீங்க ஏன் இங்க வர்ரீங்க'. இதில் என்னவென்றால் கேள்வியாளரின் பையன் B.E படிக்கவே 'தம்பி B.E படிச்சா வேல கெடைக்காதோப்பா' என மிரண்டு போய் நான் அவரிடம் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறேன் என்பதையே மறந்தவராய் அவர் என்னிடம் விசாரிக்கத் தொடங்கி விட்டார்..
ஒரு வருடம் வேலை கிடைக்காமல் அடுத்த வருடம் போனால் காத்திருக்கிறது ஒரு கேள்வி, லாஸ்ட் ஒன் இயர் என்ன பண்ணீங்க என்பது தான்.. சாக்கடைக்குள் விழப்போனவனை சாத்தான் காப்பாற்றியது மாதிரியான கேள்விதான் இது.. என் கவிதை ஒன்று
கற்றலுக்குப் பின்
நிற்றல் ஆரம்பமானது
நிற்றல் ஆரம்பமானது
வெயில் காலம் போல
வேலை தேடும் இடமெல்லாம்
வேர்த்து ஊற்றியது
வேலை தேடும் இடமெல்லாம்
வேர்த்து ஊற்றியது
வேலை இல்லாமை
ஒரு கேள்விக்குறியாக
கைகளில் தரப்பட்டது
ஒரு கேள்விக்குறியாக
கைகளில் தரப்பட்டது
வேலை இல்லையா
என்று யாராவது கேட்பாராயின்
கேள்விக்குறி
ஒரு அங்குல உயரம் வளர்ந்தது
என்று யாராவது கேட்பாராயின்
கேள்விக்குறி
ஒரு அங்குல உயரம் வளர்ந்தது
பெரும்பாலும் உறவினர்கள்
சூடான வார்த்தைகளில்
காம்ப்ளான் ஊற்றி
கேள்விக்குறியை
உயரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்
சூடான வார்த்தைகளில்
காம்ப்ளான் ஊற்றி
கேள்விக்குறியை
உயரப்படுத்திக் கொண்டே இருந்தார்கள்
வயது வளர வளர
கேள்விக்குறி
அறையின் பரப்புக்குள்
உடலை நுழைக்க முடியாமல்
மூச்சு திணறியது
கேள்விக்குறி
அறையின் பரப்புக்குள்
உடலை நுழைக்க முடியாமல்
மூச்சு திணறியது
மொட்டை மாடியில்
தங்க இடமும்
தூங்க கணத்த கம்பளியும் கொடுத்தேன்
தங்க இடமும்
தூங்க கணத்த கம்பளியும் கொடுத்தேன்
இரு முறை கம்பளியோடு
மொட்டை மாடி
உச்சியிலிருந்து
தற்கொலைக்கு முயன்றிருக்கிறது
ஒரு முறை
விஷமருந்திப் பார்த்திருக்கிறது
மொட்டை மாடி
உச்சியிலிருந்து
தற்கொலைக்கு முயன்றிருக்கிறது
ஒரு முறை
விஷமருந்திப் பார்த்திருக்கிறது
ஒரு பெளர்ணமி இரவில்
கேள்விக்குறி அருகே
அமர்ந்து
அதைத் தடவிக் கொடுத்தேன்
கேள்விக்குறி
ஒரு கெழவிக் குறி
வடிவுக்கு
வதங்கியிருந்தது.
கேள்விக்குறி அருகே
அமர்ந்து
அதைத் தடவிக் கொடுத்தேன்
கேள்விக்குறி
ஒரு கெழவிக் குறி
வடிவுக்கு
வதங்கியிருந்தது.
பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளின் காத்திருக்கும் அறைகளில் நான் காணும் காட்சி ஒத்திருக்கும்.. அது தேர்வாளர்கள் தத்தமது கைப்பேசிகளில் தத்தமது இஷ்ட தேவதைகளுடன் தேர்வு முடிவு வரும் வரை தாழ்ந்த ஒலியில் உரையாடிக் களித்திருப்பர். சென்னையை எல்லோராலும் காதலிக்க முடிவதில்லை, ஆதலால்தான் சென்னையில் எல்லோரும் காதலித்துத் திரிகிறார்கள் என்ற குறிப்பை மனம் எனக்குள்ளாகவே எழுதிக்கொள்ளும்.. நான் மற்றும் நண்பர்கள் அதற்கு நேர் மாதிரி. எங்களுக்கு காதலிகள் இல்லை, வேலையும் இல்லை.. ஆதலால் நகைச்சுவையை எங்கள் ஆயுதமாக கையிலெடுப்போம்.. நேர்முகத் தேர்வறையில் குறிப்பாக ஒருவனைச் சுட்டிக்காட்டி செல்வமாரியப்பன் கலாய்க்கத் தொடங்குவான் (எங்களுக்குள் மட்டும்).. நாங்கள் குசுகுசுத்துச் சிரிப்போம். யாரும் கிட்டாத பொழுதுகளில் தான் பொறியியல் படிக்க நேர்ந்ததையும், தற்பொழுது சீரழிவதையும் பெருத்த நகைச்சுவை பாணியில் வடிவேலு வாய்ஸில் பேசிக் களிப்பான்.. நாங்கள் சிரித்து சிரித்து அழுதிருப்போம்.. பல சமயம் அந்த அழுகையில் துயரம் இணைந்து கசிவதை மறைத்து அதை ஆனந்தக் கண்ணீராக மட்டும் அறிவிப்போம்.. அறைகளில் பலர் எங்களையே விசித்திரமாக பார்ப்பர்.. தீவிரமாக அமர்ந்து ஒரு நேர்முகத் தேர்வை எதிர்கொள்வதையே நாங்கள் வெறுத்தோம்.. எப்படியும் கடைசியில் சிபாரிசில் வந்தவனே தேர்வாவான்.. எதற்கு தீவிரமாக செயலாற்ற வேண்டும் என்ற கேள்வி மட்டுந்தான் இப்போதும் எங்களுக்குள் எஞ்சுகிறது.. தீவிரமாக செயலாற்றி வெளியேற்றப்படும் நேர்முகத் தேர்வறைகள் மிக மிகக் கொடுமையானவை. அதற்கு மறுபடியும் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தை படிக்க வேண்டி வரும்.. தீவிரமாக இருந்து வேலை கிடைக்காமல் திரும்பி வசிப்பிட அறைகளில் வாழும் இரவுகள் துயரமானவை.. அங்கு புலம்பல்களால் சுவர்களில் பெயிண்ட் உரியத் துவங்கியிருக்கும்.. மதுக்குப்பிகள் மோதிக்கொள்ளும். குடிக்கும் பழக்கம் இல்லாததால் தனியாக அழுவதற்கு எனக்கு தயக்கமாக இருக்கும். நண்பர்களுக்கு இளைப்பாறுதலை மது வழங்கியிருக்கும்.. இந்த இடத்தில் என்னை தேற்றும் என் கவிதை இது..
சென்னை என்ற
ஊரில் வேலை
தேடுபவர்கள் கவனத்திற்கு
ஊரில் வேலை
தேடுபவர்கள் கவனத்திற்கு
கிண்டியிலிருந்து தாம்பரம்
செல்லும்
மின்சார இரயிலுக்கு
சரியாக
நான்கு மணி நேரம்
செல்லும்
மின்சார இரயிலுக்கு
சரியாக
நான்கு மணி நேரம்
பன்னெடுங்காலமாக
புலம்பல்கள், பீடி, சிகரெட்களால்
இரையப்பட்ட தத்தம்
அறைகளை
இறுக சாத்திவிட்டு
உறங்குங்கள்
புலம்பல்கள், பீடி, சிகரெட்களால்
இரையப்பட்ட தத்தம்
அறைகளை
இறுக சாத்திவிட்டு
உறங்குங்கள்
வசை பாடும் அப்பாவையும்
வங்கிக் கடனையும்
ஒரு பெரிய பூட்டாக்கி
அதில் தொங்கவிட்டு உறங்குங்கள்
வங்கிக் கடனையும்
ஒரு பெரிய பூட்டாக்கி
அதில் தொங்கவிட்டு உறங்குங்கள்
மீறி கதவை தட்டும்
கேலி உறவினர் கூட்டத்தை புறக்கணிக்க
காதுகள் இரண்டிலும்
பஞ்சை அடைத்துவிட்டு
உறங்குங்கள்
கேலி உறவினர் கூட்டத்தை புறக்கணிக்க
காதுகள் இரண்டிலும்
பஞ்சை அடைத்துவிட்டு
உறங்குங்கள்
எங்கோ கசிந்து கொண்டிருக்கும்
அம்மாவின் அழுகையை
மறந்துவிட்டு உறங்குங்கள்
அம்மாவின் அழுகையை
மறந்துவிட்டு உறங்குங்கள்
சரியாக
நான்கு மணி நேரம்
எப்படியாவது உறங்குங்கள்
தமிழ்பாட்டு பாடியாவது
பாயில் படுங்கள்
ஆனால் முக்கியமான சேதி
நேர்முகத்தேர்வுக்கு
செல்லும் முன்
தமிழை பாட்டு பாடி
பாயில் படுக்கப் போடுவதை தவிர
தங்களுக்கு வேறு வழிகளில்லை.
நான்கு மணி நேரம்
எப்படியாவது உறங்குங்கள்
தமிழ்பாட்டு பாடியாவது
பாயில் படுங்கள்
ஆனால் முக்கியமான சேதி
நேர்முகத்தேர்வுக்கு
செல்லும் முன்
தமிழை பாட்டு பாடி
பாயில் படுக்கப் போடுவதை தவிர
தங்களுக்கு வேறு வழிகளில்லை.
ஒரு சோகம் மிகுந்த நேர்முகத்தேர்வு முடிவுக்குப் பின் பேருந்தில் தனியாக வந்தபொழுது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. அங்குமிங்கும் பார்த்தேன்.. ஆட்கள்.. அடக்கிக்கொண்டேன்.. அதிர்ஷ்டமாய் என் அருகில் ஒரு சிறுமி வந்து உட்கார்ந்தாள்.. மஞ்சள் நிறத்து குட்டிச் சுடிதார் அணிந்திருந்த அவள் என்னையே பார்த்து கண் மை வைத்த கன்னத்தோடு சிரித்தாள்.. என்னைச் சிரிக்க வைத்தாள்.. வண்டி அங்குமிங்கும் குலுங்கும்போது அவளை பிடித்துக் காக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தாள்.. இளைப்பாறாத இயலாத நான் குலுங்கலுக்கு பீதியுறும் அவளை இளைப்பாற்றும் அற்புதனாகிப் போனேன். அன்றைய நொடி கண் மை சிறுமிக்கும், கடவுளுக்கும் கண்ணீர் ஒழுக நன்றி கூறிக்கொண்டேன்..
எழுத்தாளர் : முகமது

Comments
Post a Comment