தமிழே தலை வணங்குகிறேன்:கவிதை
கவிதை கவிதை
ஆதிகாலத்து ஆழிவெள்ளம் உனை அழித்ததில்லை
ஊழிகாலத்து கோரம் உனை அழிக்கப் போவதில்லை
பெருந்துயர் வந்தாலும்
பேரிடி விழுந்தாலும்
மிஞ்சி நிற்கும் உன் புகழ்
அஞ்சி நிற்கும் பேரிடர்
உன்னை எழுதும் போதும் தான்
என் பேனா தரும் வலியையும் பொறுத்து
உச்சி முகரும் தாள்!
தமிழே தலை வணங்குகிறேன்.....
எழுத்து : ஜோரிகி

Comments
Post a Comment