காலுக்கும் குச்சிக்கும் வித்தியாசம் இல்லை.
காலுக்கும் குச்சிக்கும் வித்தியாசம் இல்லை
சூரியப்பேரன் ஏனோ கிழத்தியை கடை முன்பு கிடத்திவிட்டான்.
சூரியப்பேரன் ஏனோ கிழத்தியை கடை முன்பு கிடத்திவிட்டான்.
எங்கே எழுந்து விடுவாளோ என பூனை நடைபோட்டனர் பாதசாரிகள்.
எலும்பாவது தேறும் என அருகில் வந்த நாய்
அழுக்கு துணி வாடை தாங்காது விலகி நின்றது.
அழுக்கு துணி வாடை தாங்காது விலகி நின்றது.
முகமி(selfie) எடுக்க வந்த இளைஞனுக்கு
கிழவி முகம் விழாத சோகம்.
ரேகைபள்ளங்களுக்கு இடையில்
கண்ணும் வாயும் கண்டறிவது கடினம் தான்.
கிழவி முகம் விழாத சோகம்.
ரேகைபள்ளங்களுக்கு இடையில்
கண்ணும் வாயும் கண்டறிவது கடினம் தான்.
கிழவி கிடந்த கடைஉரிமையாளனுக்கு சோகம்
'இவள் படுத்து இன்று வியாபாரம் படுக்குமோ' என்று.
ஆனால் கிழவியைத் தாண்டிவிட்டு கடை நுழைந்த
வாடிக்கையாளனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
'இவள் படுத்து இன்று வியாபாரம் படுக்குமோ' என்று.
ஆனால் கிழவியைத் தாண்டிவிட்டு கடை நுழைந்த
வாடிக்கையாளனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது.
'செத்தா கதை பண்ண நல்லாருக்குமே' என்ற
பத்திரிக்கையாளனின் புலம்பல்கூட கடவுளுக்கு கேட்கவில்லை.
பத்திரிக்கையாளனின் புலம்பல்கூட கடவுளுக்கு கேட்கவில்லை.
கிழவியின் உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன.
சுருக்குப் பையின் ஓட்டையில்
முதியோர் உதவித் தொகை காசோலை எட்டிப் பார்த்தும்
படிப்பறிவற்ற திருடன் தேறாது என விலகி விட்டான்.
சுருக்குப் பையின் ஓட்டையில்
முதியோர் உதவித் தொகை காசோலை எட்டிப் பார்த்தும்
படிப்பறிவற்ற திருடன் தேறாது என விலகி விட்டான்.
குடிகாரன் போதையில் இருந்ததால் என்னவோ
கிழவி மேல் இரக்கப்பட்டான்.
கிழவி மேல் இரக்கப்பட்டான்.
ஏனோ மிக்ஸிங் தத்துவம் ஞாபகம் வர
நீர் தெளிக்காமல் சென்று விட்டான்.
நீர் தெளிக்காமல் சென்று விட்டான்.
விலகிச் சென்ற மனிதர்கள் எல்லாம்
கிழவியின் குடும்பத்தை வசைபாடி சென்றனர்.
கிழவியின் குடும்பத்தை வசைபாடி சென்றனர்.
ஆம் உண்மையில் மனிதர்கள் தாம்.
விரைந்து வந்த வண்டி இறைத்த சகதிச் சேற்றில்
நனைந்து விழிப்படைந்தாள் கிழவி.
விரைந்து வந்த வண்டி இறைத்த சகதிச் சேற்றில்
நனைந்து விழிப்படைந்தாள் கிழவி.
'எழுப்பிவிட்ட மகராசா நல்லா இருக்கனும்' என்று
வாழ்த்தியபடி குச்சியைத் தேடினாள்.
உடைந்து கிடந்தது குச்சி...
வாழ்த்தியபடி குச்சியைத் தேடினாள்.
உடைந்து கிடந்தது குச்சி...
ச.வெங்கடேஸ்வரன்

Comments
Post a Comment