ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் முடிவு!



ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தற்போது, ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனையடுத்து, இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த சில நாளுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் அனைத்து வழிகளையும் ஆராய வேண்டும் எனக்கூறியிருந்தார். இந்நிலையில், இந்த ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான செய்தி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்குவது குறித்து டாடா நிறுவன சேர்மன் என்.சந்திரசேகரன், அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதற்கட்டமாக ஏர் இந்தியாவின் 51 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்