"கல்லூரிப் பேருந்து பயணம்"



மோதும் பனியின் முத்தம்
தேடும் மனதின் சத்தம்
தீண்டும் திரண்ட தென்றல் காற்று
மீண்டும் மீண்டும் தென்னங்கீற்று
தவழும் முகிலின் தரிசனம்
தாவும் அணிலின் கரிசனம்
சன்னலுக்கு வெளியே என் மனம்
பின்னலுக்குப் பின்னால் நறுமணம்
இயற்கை நடத்தும் கலைநிகழ்ச்சியில்
ஒற்றைப் பார்வையாளனாய் நான்..
என்னுடன் பேருந்து முழுதும் எண்ணற்ற
குனிந்த தலைகள் கைபேசியுடன்....
எழுத்து:ஜோரிகி

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்