ஆன்லைனில் உணவு முன்பதிவு: irctc புதிய வசதி
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவினை, ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை இந்திய ரயில்வே (irctc) அறிமுகம் செய்துள்ளது.உணவு பிரியர்களின் விருப்பமான உணவினை பீட்சா, பர்கர் போன்ற தாங்கள் விரும்பும் உணவை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் முறை நேற்று(ஜூன்,15) முதல் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரயில்களில் இப்புதிய முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.www.ecatering.irctc.co.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும், 1323 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் ரயில் பயணிகள் விரும்பும் உணவை முன்பதிவு செய்யலாம். MEAL என டைப் செய்து பின்னர் PNR எண்ணைப் பதிவு செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் உணவை முன்பதிவு செய்யலாம்.

Comments
Post a Comment