அப்பா !


அப்பா ! அப்பா !
அப்பா......
தன் கரத்தைத் தலையணையாக்கியவர்
தன் தோளைத் பல்லக்காக்கியவர்
தன் மடியை தொட்டிலாக்கியவர்
தன் தொடையைச் சிம்மாசனமாக்கியவர்
தன் காலை ஊஞ்சலாக்கியவர்
தன் முதுகை யானைசவாரியாக்கியவர்
எல்லாம் எனக்காக....
தன் ஓய்வை உழைப்பாக்கியவர்
உறக்கம் விட்டு என் வாழ்வுதிட்டமாக்கியவர்
திட்டலைக் கூட தித்திப்பாக்கியவர்
என் அழுகைக்காக தன் மனையாளைப் பகையாக்கியவர்
தன் வடுக்கள் மறைத்து என் சுவடாக்கியவர்
தன் விரல் கொண்டு என் கையெழுத்து ஆக்கியவர்
எல்லாம் எனக்காக....
எழுத்து : ஜோரிகி

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்