நம்மிலிருந்து தொடங்குவோம்....!
நம்மிலிருந்து தொடங்குவோம்....! நம்மிலிருந்து தொடங்குவோம்....!
நமது சமூகம் வெகுகாலமாக ஒரு பெரும் பிரச்சனையை சந்தித்து கொண்டு வருகிறது. அப்படி என்ன பிரச்சனை ? நம்மையும் நமது சமூகசூழலையும் பாதித்து கொண்டு வருவது என்னவென்றால் அது சுற்றுசூழல் சீர்கேடு என்போம்.உலகமெங்கும் சுற்றுசூழல் மாசுபட்டு தான் இருக்கிறது. மாசுபாட்டின் அளவு தினமும் அதிகரித்து கொண்டே போகின்றது தவிர குறையவில்லை.
கொங்கு மண்டலம் மட்டும் அல்ல நமது தாய்நாட்டின் பெரும்பகுதியை நாம் பயன்படுத்தும் பாலீதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுடன் குப்பைக்கூளங்கள்,திறந்தவெளி சாக்கடைகள் ஆக்கிரமித்துள்ளன. நிலமாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளது அது ஏன்? எதற்கு? என்பதை ஆலோசித்துக் கொண்டிருப்பதை தவிர்த்து அதற்கான தீர்வை கண்டு செயல்படுத்துவோமே...! மக்கள் தொகை அதிகரிப்பினால் விளை நிலங்கள் கூட இன்று விலை நிலங்களாக மாறிக்கொண்டு இருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 1.34 பில்லியனாக உள்ளது. யாருக்கு தெரியும் ஒருநாள் சீனாவை முந்தி முதல் இடத்திற்கு கூட செல்லலாம்.அதனால் என்ன...? ஆனால் அனைத்திலும் நாம் முதலாக இருப்போம்.முதலாவது இருந்து என்ன புன்னியம் சுற்றுச்சூழல் சுகாதாரத்தில் நமது தாய்நாடு 50.9 சதவீதம் பெற்று உலகநாடுகளின் வரிசையில் 32வது இடத்தில் உள்ளது.இந்நிலை மாறவேண்டாமா.....மாறும் நம்மில் மாற்றம் வருவது நிச்சயமெனில்...!
இவ்வாறு சுற்றுசூழலை பாதிக்கும் எல்லாவற்றையும் மாற்ற வேண்டுமெனில் ஒவ்வொன்றாக கையாள்வோம். முதலில் பாலிதீன் பை குப்பைகளை எடுத்துக்கொள்வோம் . நம் நாட்டில் 1.34 பில்லியன் மக்களில் சராசரியாக நூற்றுக்கு 90% மக்கள் தனது பங்களிப்பில் தினம் ஒரு பாலீதின் பையை உபயோகித்தால் நம் நாட்டின் நிலை என்னவாகுவது.... நமது பங்களிப்பு பாலீதின் உபயோகத்தில் இல்லாமல் இருப்பது நமது கையில் தானே உள்ளது குறைந்தபட்சம் நம்மால் முடிந்தவரை பாலீதின் உபயோகத்தை தடுப்போம். துணிப்பைகளை உபயோகிப்போம்.
அடுத்ததாக பூதகரமாக நம்மை ஆக்கிரமித்துள்ள தொழில்நுட்பம்,மின்னனு சாதனங்கள்....ஆச்சரியமாக இருக்கலாம் இதிலென்ன மாசுபாடு என்று யோசித்து பார்த்தால் நிலமாசுபாடு..நம் நாட்டில் 92 கோடியே 43 லட்சத்து 187ஆயித்து 927 பேர் கைபேசியை பயன்படுத்துகின்றனர். உலகில் கைபேசி அதிகம் உபயோகிக்கும் நாடுகளின் பட்டியலில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்வாறு நவீன தொழால்நுட்பத்தை பயன்டுத்தும் நம்மில் பெரும்பாலோனோர் சில தவறுகளை இழைக்கின்றனர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பொருட்கள் அறிமுகமாகும் சாதனங்களையே உபயோகிக்க ஆர்வமாக உள்ளோம்.இதன் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் மின்னணு சாதனக் கழிவுகள் டன் கணக்கில் உருவாக்கப்படுகின்றன.";இ-வேஸ்ட்" என்று ஆங்காங்கே குப்பை குவியல்களின் தாண்டவம் அரங்கேறி வருகிறது.
"தொழில்நுட்பத்தை உபயோகத்திற்கு" மட்டும் பயன்படுத்துவோம். ஆடம்பரத்திற்கு அல்ல... சிறிதேனும் சிந்திப்போம்....
இதுபோல் எண்ணற்றவை இருக்கின்றன.வெளியே செல்லும் போது முடிந்தவரை தண்ணீர் பாட்டில்களை வாங்காமல் தவிர்த்தல்,திருவிழா சமயங்களில் கோயிற்குளங்களில் நீராட செல்பவர்கள் அசுத்தபடுத்தாமல் இருத்தல் இவ்வாறு சிறு சிறு பிழைகளை தவிர்த்தலே நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்காகும்.
சமூகமாற்றத்திற்கான விதையை நம்மில் விதைப்போம் ஒருநாள் விதை விருட்சமாய் நிலைத்து நிற்கும். மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும்
முதலில் மாறுவோம் பிறகு மாற்றுவோம்...!
தொகுப்பு: ச.குணப்பிரியா, விழுப்புரம்

Comments
Post a Comment