முகத்தை பிரகாசமாக வைக்கும் ஃபேஸ்பேக்
தயிர் மற்றும் குங்குமப் பூ : தயிருடன் குங்குமப் பூ கலந்த நீரை கலந்து கொள்ள வேண்டும்.இதை முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும்,காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த 4 ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை இயற்கையாகவே பொலிவாகவும்,பிரகாசமாகவும் மாற்றுங்கள்.
பால்: சிலருக்கு செயற்கை ரசாயனங்கள் கலந்த சுத்தப்படுத்திகளை உபயோகித்தால் தோலில் அலர்ஜி போன்று ஏற்படும்.அவர்களுக்கு இந்த பால் சிறந்தது.பாலை தினமும் முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.இவ்வாறு செய்வதால் சருமம் பொலிவாக இருக்கும்.
கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் : கடலை மாவை கடுகு எண்ணெய் மற்றும் பாலுடன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த கலவையை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும்.இதை குளிக்கும் முன் செய்ய வேண்டும்.சிறிது நேரம் கழித்து உலர்ந்ததும் குளிக்க வேண்டும்.இவை இறந்த செல்களை வெளியேற்றுகிறது மற்றும் தோலை ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது.மேலும் முகத்தை பிரகாசமாகவும் மாற்றும்.
மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் : மஞ்சள் ஆன்டிபயாடிக் மட்டுமல்ல சில கிருமிகளையும் அழிக்கக்கூடிய குணங்களைக் கொண்டுள்ளது.இந்த மஞ்சளை ரோஜா நீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.காய்ந்ததும் முகத்தை அலச வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகம் பிரகாசமாக மாறும்.

Comments
Post a Comment