பிரச்னைகளை ஆய்வு செய்ய :மூன்று பேர் அடங்கிய கமிட்டி
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது.இதில் 'திரைத்துறையில் பணியாற்றும் பெண்கள், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இது பற்றி ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும்' என, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையில், மூன்று பேர் அடங்கிய கமிட்டியை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கமிட்டியில், பழம்பெரும் நடிகை சாரதா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.வி.வல்சாலாகுமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறவும், ஒப்புதல் வழங்கப்பபட்டது.'திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வு செய்து, அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த கமிட்டி பரிந்துரை செய்யும்' என, கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments
Post a Comment