லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
வங்கிகளில் உள்ள லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் திருடுபோனால், அதற்கு வங்கிகள் பொறுப்பாக முடியாது என ரிசர்வ்வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் கூறியுள்ளன.வங்கிக்கும், வாடிக்கையாளருக்கும் லாக்கர் தொடர்பாக உள்ள உறவானது, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் என்ற அடிப்படையில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், வங்கிகளில் வைக்கப்படும் பொருட்களுக்கு பொருட்களின் உரிமையாளரே பொறுப்பாகும்.லாக்கர்களில் வாடகைக்கு எடுக்கப்படும் போது, அதில் வைக்கப்படும் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றிற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பாகாது. போர், உள்நாட்டு பிரச்னை, திருட்டு, கொள்ளை போன்ற சூழ்நிலைகளிலும் வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தான் வைக்க வேண்டும் என்பது அனைத்து வங்கிகளிலும் உள்ள நடைமுறை.

Comments
Post a Comment