சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு: 10 பேரை திருமணம் செய்த பெண் !
திருமணம் செய்த பெண் ! திருமணம் செய்த பெண் !
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரைப்பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்ணுக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் செய்து இருந்தார். இந்த விளம்பரத்தை பந்தளத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பார்த்து அதில் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். எதிர் முனையில் ஷாலினி பேசினார். அப்போது தான் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும், முதல் கணவர் இறந்து விட்டதால் தனக்கு இது 2வது திருமணம் என்றும், விரைவில் கேரள ஐகோர்ட்டில் வேலை கிடைக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அப்போது ஷாலினி தனக்கு பெரிய அளவில் உறவினர்கள் யாரும் கிடையாது. திருமணத்தி்ற்கு ஒருசிலர் மட்டுமே வருவர் என்று கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை பந்தளம் அருகே ஒருகோயிலில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.மணப்பெண் அலங்காரத்தில் கோயிலுக்குள் வந்த ஷாலினியை கண்டு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். சந்தேகமடைந்த நபர் உடனே அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்து கோவிலுக்கு வர சொன்னார்.அங்கு வந்த வாலிபர் தன்னை ஷாலினி திருமணம் செய்து ஏமாற்றியதை கூறினார். உடனே திருமணம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து பந்தளம் போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அதில் ஷாலினி திருமண மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்பணம், நகைக்கு ஆசைப்பட்டு இதுவரை 10 பேரை ஷாலினி ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், ஆரன்முளா, செங்கனுார் ஆகிய போலீஸ் ஸ்டேசன்களில் ஷாலினி மீது திருமண மோசடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு பல ஆண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களில் கையில் கிடைக்கும் பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகி விடுவதை அவர் வாடிக்கையாக கொண்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு : Click

Comments
Post a Comment