சாகச நிகழ்ச்சியில் குழிதோண்டி புதைக்கப்பட்ட வாலிபர் : பரிசாக மரணம்
சாகச நிகழ்ச்சியில் குழிதோண்டி புதைக்கப்பட்ட வாலிபர்
ஹரியானா மாநிலம், பானிப்பட் மாவட்டம், சமால்கா தாலுகாவில் உள்ள குரார் என்ற கிராமத்தை சேர்ந்த, 17 வயது இளைஞர் சுமித் காதி படிப்பை பாதிலே விட்டு விட்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தும் ஜகதீப் என்பவருடன் சுமித் காதி சேர்ந்தார். கடந்த ஜூன், 24ம் தேதி இரவு 10 மணிக்கு ஜகதீப், சுமித் காதி மற்றும் ஏழு பேர் சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்ட ஒன்று கூடினர்.அங்குள்ள ஒரு மைதானத்தில் பெரிய குழி தோண்டப்பட்டது. சுமித் காதி சாக்கு பையில் நுழைந்து கொண்டார். அந்த சாக்கு பைக்கு 21 முடிச்சுகள் போடப்பட்டன. அதற்கு முன் சுமித் காதியிடம் ஒரு மொபைல் போன் தரப்பட்டது. பின்னர் அந்த சாக்கு பை, குழியில் இறக்கி விடப்பட்டு மரப்பலகைகளால் மூடப்பட்டது.

அதன் மீது மண் கொட்டி மேலும் இறுக்கமாக மூடிவிட்டனர். அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியில் இருந்து சுமித் காதி உயிருடன் வெளியே வருவார் என கிராம மக்களிடம் கூறி , 8,500 ரூபாய் வரை வசூலித்தனர். குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட போது, தன்னிடம் இருந்த தொலைபேசி மூலம் ஜகதீப் உள்ளிட்ட தன் நண்பர்களை அவர், 26 முறை தொடர்பு கொண்டுள்ளார் .யாரும் தொலைபேசியை எடுக்காததால் நடந்த விபரீதம்.அடுத்த நாள் இரவு, 10 மணிக்கு குழியை தோண்டி சுமித் காதியை வெளியே எடுத்த போது மயங்கி நிலையில் காணப்பட்டார். மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் பற்றி தெரிந்த உடன் போலீசார் விரைந்து வந்து ஜகதீப்பை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Comments
Post a Comment