வாக்கிங் செல்லும் ஆர்வத்தை தூண்டும் வழிமுறைகள்
வாக்கிங் (நடைபயணம் ) உடலிற்கு மிக நல்லது. மிக எளிய உடற்பயிற்சியும் கூட.இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.மிக அதிகப் பலன் அளிக்கக் கூடியது.இதயம், எலும்புகள் பலப்படுகின்றன, மன அழுத்தம் குறைகிறது. கொழுப்பைக் கரைத்து, உடலை ஃபிட்டாக்குகிறது, நம்பிக்கை பிறக்கிறது.காலையில், 5-6 மணிக்கு நடப்பதால் அதிகாலைக் காற்று நடப்பதற்கான ஆர்வத்தையும் எனர்ஜியையும் தரும்.உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும். ,மனம் அமைதி பெரும். கோடை காலத்தில் எட்டு மணிக்கு மேல் வெயில் அடிப்பதால், சாலைகளில் நடக்க வேண்டாம். பூங்காவிற்கு செல்லலாம்.சாலையில், பாடல் கேட்டபடி நடப்பதைத் தவிர்க்கலாம். வாகனம் வருவதற்கு எதிர்ப்புறத்தில் நடக்க வேண்டும். இதனால், விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தொடர்ந்து ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம். வாரத்தில், இரண்டு நாட்களுக்கு புதிய இடங்களில் வாக்கிங் செல்லலாம். இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும்போதுதான் சுவாரஸ்யம் அதிகரிக்கும்.பழச்சாறுகளை அருந்துங்கள் . உடலுக்கு உற்சாகமூட்டும் பழச்சாறைக் கொடுத்து உடலை ஆரோக்கியப்படுத்திக்கொள்ளலாம்.பலன்கள் ,கீரை வகைகள் உணவில் தினசரி எடுத்து கொள்வது உடலிற்கு நல்லது

Comments
Post a Comment