கும்ளே திடீர் ராஜினாமா
இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் கும்ளே, 46. இவரது ஒரு ஆண்டு பதவிக்காலம் (17 போட்டியில், 12ல் வெற்றி) நேற்றுடன் முடிகிறது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை, இவர் பதவியில் தொடர்வார் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்தது. இதற்கு கேப்டன் கோஹ்லி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வௌியாகின. இவர்களுக்கு இடையிலான உறவு மோசமான நிலைக்கு சென்று விட்டதால், சமரசம் செய்து வைக்க முயன்ற, சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், கும்ளே இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்ல மாட்டார் என செய்திகள் தெரிவித்தன.இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை கும்ளே திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பியதாக தெரிகிறது.

Comments
Post a Comment