5 சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்!


திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்! திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்!

ராஜோ என்ற பெண். இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இந்த பெண் டேராடூன்-ல் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் தான் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார்.இவர்களது குடும்பத்தை பொறுத்தவரை இது இவர்களது குடும்பம் பழக்கம் எனவும் இதை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்காலத்திலும் கடைபிடிப்போம் என தெரிவிக்கின்றனர்.
இந்த பாரம்பரிய வழக்கம் மகாபாரதத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. மகாபாரதத்தில் திரௌபதி பாண்டவர்களை திருமணம் செய்திருப்பார். இப்போது ராஜோ நவயுக திரௌபதியாக வாழ்ந்து வருகிறார்.மேலும், இந்த சகோதரத்துவ பலதாரமண வழக்கத்திற்கு அந்த கிராமத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் பெண்கள் வசித்து வருவதே காரணம் எனவும் கூறப்படுகிறது.ராஜோவிற்கு ஒரு குழந்தை இருக்கிறார். இவர்களது குடும்பத்திலேயே யார் அந்த குழந்தைக்கு தந்தை என தெரியாதாம்.இவர் முதலில் குட்டு வர்மா என்பவரை தான் திருமணம் செய்துக் கொண்டார். பிறகு அவரது இளைய மற்றும் மூத்த சகோதரர்களான பஜ்ஜூ வர்மா, சாந்த் வர்மா, கோபால் வர்மா மற்றும் தினேஷ் வர்மாவை திருமணம் செய்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்