சிறுவயதிலே துறவறம் செல்லும் குஜராத் மாணவன் !
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 17 வயது மாணவர் வர்ஷில் ஷா. நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்ற எல்லோரும், மருத்துவம், இஞ்ஜினியரிங் என்று மேற்படிப்புகளுக்கு சென்றுகொண்டிருக்க, வர்ஷித்தோ, ஜெயின் மதத்தில் சேர்ந்து விரைவில் துறவறம் பூண திட்டமிட்டுள்ளார். சிறுவயதிலேயே ஜெயின் மதத்தை சேர்ந்த ரத்னவிஜய்சூரி மகாராஜின் போதனைகளை கேட்டுவந்த வர்ஷில் ஷா, அவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்ட வர்ஷில், பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ரத்னவிஜய்சூரி மகாராஜிடம் தீட்சை பெற திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

Comments
Post a Comment