அமெரிக்காவிலிருந்து இன்று 'மன் கி பாத்' ல் மோடி உரை
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். புறப்படுவதற்கு முன் டுவிட்டரில் அவர், ஜூன் 25 காலை 11 மணிக்கு மன் கி பாத்.,ல் உரையாற்றுவேன் என பதிவிட்டுள்ளார்.
அதன்படி, ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று (ஜூன் 25) வழக்கம் போல் மன் கி பாத் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் மற்றும் மோடி ஆப் ஆகியவற்றில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. யூட்யூப்பிலும் இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. மக்கள், மோடி ஆப்ஸ் அல்லது 1922 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தோ தங்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யலாம்.

Comments
Post a Comment