இந்தியாவில் முதலீடு செய்ய பலர் ஆர்வம்: சுந்தர் பிச்சை
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி சி.இ.ஓ., சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் அமெரிக்காவை மையமாக வைத்து உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பல பெரிய நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் கலந்து கொண்டனர்.தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ.,வாக உள்ள சுந்தர் பிச்சையும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தியாவிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இந்த கூட்டம் அமைந்தது. இதில் பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டன. எல்லோரும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். . நாங்கள் அதில் எப்படி பங்கு கொள்ள போகிறோம் என்பதை ஆலோசித்து வருகிறோம்.இந்தியாவில் ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருகிறது. அதை நாங்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகிறோம். வரி விதிப்பில் இருந்த பல குளறுபடிகளை மாற்றும் மிகப்பெரிய ஆயுதமாக ஜி.எஸ்.டி., இருக்கும் எனவும், இது இந்தியாவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வரும் என நம்புகிறேன். '' என கூறினார்.

Comments
Post a Comment