ஃபேக் ஐடிக்களை கண்டுபிடிப்பது எப்படி?



ஹாய் பாஸ்! சினிமா பாத்துட்டு "இதே ஹீரோயின் மாதிரி ஒரு பொண்ண பேஸ்புக்ல ப்ரெண்டாக்கி லவ்வராக்குவேன்"னு ஹீரோ மாதிரி யோசிக்கிற பசங்க சந்திக்கிற பிரச்சினை பேக்ஐடீஸ்....இதுல இருந்து எப்படி தப்பிக்கனு யோசிக்கிறவங்களுக்கு இந்த ஆர்டிக்கிள். 
*எவ்ளோ பெரிய ஆணழகனா இருந்தாலும் ஒரு பொண்ணு ரெக்வொஸ்ட் கொடுத்தா எதுக்குனு யோசிங்க..மியூச்சிவல் ப்ரெண்ட் காட்டாத, தெரியாத பொண்ணுனா நம்ம பசங்க விளாடுறாங்கனு அர்த்தம்!
*பொறந்த தேதி ஜனவரி 1 னு காட்டுற பல ஐடி ஃபேக் தான்.(அதுக்காக ஜனவரி 1 பொறந்தவங்க பொண்ணே இல்லயானு சண்டைக்கு வராதீங்க...).சில அறிவுஜீவிகள் ஜெண்டர் பையன் னு போட்டும் விளாடுவாங்க.
*ஒரு பொண்ணு ஐடியோட ப்ரெண்ட் லிஸ்ட் ஃபுல்லா பசங்களே இருந்தா பொண்ணுங்களே பிடிக்காத பொண்ணுனு தப்பா நினக்காதீங்க.அது ஃபேக் ஐடியே.
*டைம்லைன் செக் பண்ணி பாருங்க.ஆபாசமான பதிவு இருந்தா எப்டியாச்சும் தப்பிச்சிருங்க.ஆபாசமா பேசுருவங்கட்ட இருந்தும் தள்ளி இருங்க.பணம் பறிக்கிற கும்பல்ட மாட்ட வேணாம்.
*"நான் அழகா இருக்கேனா?கமெண்ட் பண்ணா நம்பர் தரேன்" இந்த ஸ்டேட்டஸ் போடுற நல்லவனுங்கள விட அதையும் நம்பி கமெண்ட் போடுற அப்பாவி பசங்களா நீங்க ஆகிடாதிங்க பாஸ்.
*அப்புறம் ஒரு முக்கியமான விசயம்.மனச திடப்படுத்திகோங்க.ப்ரெண்ட் ஆனதும் ஒரு தெரியாத பொண்ணு "புரொபைல் பிக்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க"அப்டினு சொன்னா கண்ணாடிய பாக்காம நம்ப வேணாம்.
*இப்பிடி எதுக்கு ஒரு பொண்ண Fb ல பிடிச்சி ப்ரெண்டாக்கி லவ்வராக்கனும்?பேசமா நேர்ல பாக்குற பொண்ணுங்கள உண்மையா லவ் பண்ண டிரை பண்ணுங்க.ஏன்னா கிட்ஸ் Fb ல லவ்வர் பிடிப்பாங்க,மென் தெரியாத பொண்ண டாவடிப்பாங்க,லெஜெண்ட்ஸ் நேர்ல பாக்குற பொண்ண லவ் பண்ணிவாங்க...என்ன கரெக்ட் தான?
தொகுப்பு: ச.வெங்கடேஸ்வரன்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்