மலேஷியாவுடன் ஒப்பந்தம்
ரயில் நிலையங்களை புதுப்பித்து, ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த, ரயில்வே முடிவு செய்துள்ளது. அரசு - தனியார் பங்கேற்புடன், இந்த பணிகளை மேற்கொள்ளவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை புதுப்பிப்பதுடன், அதை ஒட்டியுள்ள, ரயில்வேக்கு சொந்தமான நிலத்தில், ஓட்டல்கள், வணிக வளாகம், அலுவலக வளாகம், மருத்துவமனை போன்றவற்றை கட்டவும் முடிவு செய்துள்ளது.இந்த பணியை மேற்கொள்ளும், தனியாருக்கு, 45 ஆண்டுக்கு, நிலத்தை குத்தகை வழங்கவும் முடிவு செய்துள்ளது. மொத்தம் 400 ரயில் நிலையங்களில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மூதலீட்டில், அரசு - தனியார் பங்கேற்புடன், இந்த பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.ரயில் நிலையங்களை புதுப்பித்து, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மலேஷியா அரசுடன், ரயில்வே துறை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பின், இதற்கான பணிகள் துவக்கப்படும் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments
Post a Comment