மும்பை போலீசாருக்கு நடமாடும் உணவகம்
மும்பை போலீஸ் துறை செய்தித் தொடர்பாளர், ரஷ்மி கரந்திகர் கூறியதாவது: மும்பைவாசிகளின் பாதுகாப்பு பணியில், 24 மணி நேரமும் ஈடுபடும் போலீசார், பணி நேரத்தில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். முக்கிய விழாக்கள் மற்றும் கூட்டங்களில் பாதுகாப்பு பணி மற்றும் பதற்றமான சூழலில், நீண்ட நேரம் பணியில் ஈடுபடும் போது, தரமான உணவு, குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில், சரியான நேரத்தில், தரமான உணவை வழங்குவதற்காக, 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' என்னும் நடமாடும் உணவகம் துவங்கப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment