முகத்திற்கு சிறந்த மருந்து கற்றாழை!


வெயிலின் தாக்கத்தினால் சருமத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவையுடன், சருமத்தின் நிறமே மாறிவிடும். இப்படி வெயிலினால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்க, சருமத்திற்கு அதிகபடியான பராமரிப்பை வழங்க வேண்டும்.கோடையில் சருமத்திற்கு பராமரிப்பு என்பது அவசியமாகிறது.இதற்காக நாம் கடைகளில் விற்கும் பொருட்களை வாங்க தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பராமரிக்கலாம்.
கீழ்கண்ட குறிப்புகள் செய்து வாருங்கள்:
*கரும்புள்ளிகள் மறைய, கற்றாழை ஜெல்லில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும முகத்தை கழுவ வேண்டும்.
*கற்றாழை ஜெல்லுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கும்.
*வறட்சியான சருமத்தைப் போக்க, கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாறு மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து கலந்து, வாரத்திற்கு இரண்டு முறை மாஸ்க் போட்டு வந்தால், வறட்சியான சருமம் நீங்கும்.
*வெயிலில் அதிகம் சுற்றினால் சருமத்தில் ஒருவித கருமை ஏற்படும். அதனைப் போக்க, கற்றாழை ஜெல்லில் தக்காளி சாறு சேர்த்து கலந்து, ஒரு வாரம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தின் கருமை நீங்கி, நிறம் அதிகரிக்கும்.
*சரும அழகை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லில், மாம்பழச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
*தேன், மஞ்சள்தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் பொலிவான சருமத்தைப் பெறலாம்.
மேலும் அழகு சம்பந்தமான செய்திகளை பெற Click
Published in மகளிர்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்