நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்:அமெரிக்க எம்.பி.,க்கள்


அமெரிக்க பார்லிமென்ட்டில், குடியரசு கட்சியை சேர்ந்த, எம்.பி., டெட் போயி, மற்றும் ஜனநாயக கட்சி, எம்.பி., ரிக் நொலன் ஆகியோர் தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்க, அமெரிக்க அரசின் சார்பில் பாகிஸ்தானுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், 2002ல், பாகிஸ்தானை, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் சேர்த்தார். இந்த அந்தஸ்து பெற்றதன் மூலம், அந்த நாட்டிற்கு பெருமளவு ஆயுத சப்ளையும், நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஒடுக்க வழங்கப்படும் நிதியை, பாகிஸ்தான் முறையாக பயன்படுத்தவில்லை. எனவே, 15 ஆண்டுகளாக, பாகிஸ்தானுக்கு நிதி வழங்கியதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும். அந்த நாட்டிற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்