ஜி.எஸ்.டி.,யால் திருப்பதி லட்டு விலை உயரும்
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், வரும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வரிவிதிப்பானது ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் வருவாய் கிடைக்கும் கோயில்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக வருமானம் வரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், தரிசன டிக்கெட்டுகளின் விலை உயரும். தற்போது 1 லட்டு தயார் செய்ய 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 6 சதவீத வரி செலுத்த வேண்டிடும். இதனால் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களின் விலை உயரும்.

Comments
Post a Comment