பறக்கும் கண்காணிப்பு கேமரா வாங்க மத்திய அரசு தீவிரம்
இந்தியா அமெரிக்காவிடம் இந்தியா கேட்டிருந்த 2 பில்லியன் டாலர் மதிப்பிலான 22 பறக்கும் கண்காணிப்பு கேமராக்களை பெறுவது குறித்து உறுதி செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. இந்த பறக்கும் கேமராக்கள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கேமரா கொண்டு மட்டுமே இயங்க கூடியது. இந்த பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டால் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும் எனவும், இதன் மூலம் 7500 கி.மீ., வரை பயங்கராவாதிகள் ஊடுருவல், ஆக்கிரமிப்பு தடுப்பு கண்காணிப்பு, வானிலை , கடல் நிலை மாற்றம், உள்ளிட்ட பல கண்காணிப்பு பணிகளுக்கு உதவும் எனவும், பிரதமர் மோடி- டிரம்ப் சந்திப்பின் போது முக்கிய அம்சமாக இது இடம் பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment