தமிழ் செம்மொழி தினம் - இன்று


தமிழ் செம்மொழி தினம் - இன்று: தமிழ் செம்மொழி தினம் - இன்று:
தமிழ் செம்மொழி தினம் - இன்று:
2004ஆம் ஆண்டு இதே நாள் (சூன் 5) இரண்டு அவைகளையும் கூட்டிய கூட்டமொன்றில் அன்றைய குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் அவர்களால் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.ஆதலால் இந்த தினம் தமிழ் செம்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் செம்மொழி :
மிகவும் பழமைவாய்ந்த மொழிகளை பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியவற்றை மட்டுமே செம்மொழிகளாக அறிவிப்பர்.அந்த வகையில் தமிழ், சமஸ்கிருதம்,சீனம்,இலத்தீன்,கிரேக்கம்,ஹீப்ரு ஆகிய செம்மொழிகளாக அங்கிகரீக்கப்பட்டுள்ளன. இவற்றில் இலத்தீன்,கிரேக்கம்,ஹீப்ரு வழக்கில் இல்லை.சீனம் முழுமையான எழுத்துமொழியாக இல்லை.அது சித்திர மொழி.மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாது.சமஸ்கிருதம் பேச்சுமொழியாக இன்று இல்லை.மந்திரங்களுக்கு மட்டும் பயன்படுகிறது.ஆனால் தமிழ் அன்றும் இன்றும் என்றும் இளமை மாறாது பேச்சுமொழியாக எழுத்துமொழியாக நம் நாவுகளில் நடைபோடுகிறது என்றால் தமிழ் உயர்தனிச்செம்மொழி தானே!
உலக மொழி தமிழ் :
தமிழ் இந்திய தேசத்தால் ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மொழி மட்டுமல்ல.அது உலக மொழி.இலங்கையில் ஆட்சிமொழியாக உள்ளது.சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் ஆட்சிமொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.தென்னாப்பிரிக்காவில் அரசியல் அங்கீகாரம் பெற்று ஓங்கி உயர்ந்துள்ளது தமிழ்.
தமிழர்களாய் நம் கடமை :
மகாத்மா காந்தி அவர்கள் "அடுத்த ஜென்மம் என்று இருந்தால் தமிழனாக பிறப்பேன்" என்றார்.தமிழார்வலர் ஜி.யு.போப்தன்னுடைய கல்லறையில் "இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் " என எழுத சொன்னார்.கிருத்துவ சமயம் பரப்ப மேலைநாட்டில் இருந்து வந்த வீரமாமுனிவர் தமிழ் பணியாற்றினார்.கால்டுவெல் தமிழை செம்மொழியாக அறிவிக்கப்போராடினார்.இன்று வடமாநிலத்தைச் சேர்ந்த தருண்விஜய் M.P கூட தமிழுக்காகப் போராடுகிறார். இப்படி தமிழைத் தாய்மொழியாக கொண்டிராதவர்கள் எல்லாம் தமிழன்பர்களாய் ஆன போது தமிழைத் தாய்மொழி கொண்ட நாம் தமிழைக் காத்திட உறுதி ஏற்போம்.
தொகுப்பு : சக்தி (ச.வெங்கடேஸ்வரன்) , அ.நா.விஜயரேவதி

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்