குட்டை பாவாடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்


பிரித்தானியாவில் சமீப காலமாக நிலவி வரும் வெப்ப நிலை காரணமாக Isca Academy பள்ளியைச் சேர்ந்த உயர்நிலை பள்ளி மாணவர்கள் பேன்டிற்கு பதிலாக அரைகால் டவுசர் அணிய பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கடந்த வியாழக்கிழமை குட்டைப் பாவாடை அணிந்து பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு தண்டனையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகையில், அரை கால் டவுசர்கள் எங்களது பள்ளி சீருடையில் அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாணவர்களிடமும் அவர்களது பெற்றோரிடமும் பேச இருக்கிறோம். இன்னும் சில தினங்களில் வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாணவர்களின் கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்