லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு!


கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் மொரிசியஸ் அருகே ரியூனியன் என்ற தீவு அமைந்திருக்கிறது இங்கே தான் தமிழர்கள் இன்றளவில் லட்சக்கணக்கில் குடும்பம், குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் மொத்த பரப்பளவே 2500 கி.மீ சதுர தூரம் தான். 2012-ன் மக்கள் தொகை கணக்களவு படி இந்த தீவில் ஏறத்தாழ 8.4 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது. இந்த தீவு பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கே மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.180 ஆண்டுகளுக்கு முன், பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டுக்கு கீழே அடிமையாக இருந்து வந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்தும், மற்ற தமிழக பகுதிகளில் இருந்தும் ஏஜெண்டுகள் மூலம் பலர் இந்த ரியூனியன் தீவிற்கு கரும்பு தோட்டங்களில் பணிபுரிய அழைத்து செல்லப்பட்டனர்.ஆரம்பக் காலக்கட்டத்தில் பிரெஞ்சு அரசின் கீழே இங்கிருந்து சென்ற தமிழர்கள் அடிமை போல தான் நடத்தப்பட்டனர். பிறகு ஆண்டுகள் கழிய, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை தமிழர்களுக்கு கிடைத்து கவுரமவாக பார்க்கப்பட்டனர்.
இங்கு வாழும் மக்கள் பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாச்சார கலவையுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக தமிழர்கள் மக்கள் தொகை குறைந்து வந்தாலும், தங்களால் முடிந்த வரை, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றி, பின்பற்றி வருகிறார்கள் ரியூனியன் தீவை சேர்ந்த தமிழர்கள். இன்றளவும் இங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி தான் வருகின்றனர். மேலும், இவர்கள் கரகம், காவடி ஆட்டங்கள் போன்ற கலைகளையும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்