விவசாய கடன் தள்ளுபடி 'பேஷன்' ஆகிவிட்டது : வெங்கையா நாயுடு


வெங்கையா நாயுடு வெங்கையா நாயுடு
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, வெங்கையா நாயுடு பேசியதாவது: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. எனினும், கடன் தள்ளுபடியால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது. தற்போதைய சூழலில், கடன் தள்ளுபடி அறிவிப்பு ஒரு பேஷன் ஆகிவிட்டது. மிக மிக இக்கட்டான சூழலில் மட்டுமே, கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்