மூச்சு திணறி இரட்டை குழந்தைகள் பலி!



அரியானா மாநிலம் குர்கான் அருகிலுள்ள பட்டாடி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீட்டின் வௌியே தனது காரை நிறுத்தியிருந்தார். கார் கதவு பிரச்சனையால் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகள்  காருக்குலேயும் ஏறி விளையாடி உள்ளனர் .ஒரு சமயத்தில் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கார் கதவு தானாக மூடி விட்டது. காரினுள் இருந்த இரட்டை குழந்தைகள் 2 பேரும் சத்தமிட்டனர்.குழந்தைகளின் சத்தம் வௌியே கேட்கவே இல்லை. சிறிது நேரத்தில் மூச்சு தினறி அப்படியே மயங்கி  விட்டனர். குழந்தைகளை காணவில்லை  என்று அவரது தந்தை தேடியுள்ளார் எதார்த்தமாக காரினை திறந்து பார்த்தால் குழந்தைகள் மயங்கிய நிலையில் இருந்தனர்.உடனே மருத்துமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து பார்த்தால்  இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக மருத்துவர்  தெரிவித்தார்.இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்