17 வயது மாணவனுக்கு கூகுளில் வேலை


இந்தியாவின் சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. மேலும் கூகுள் நிறுவனத்தில் பணியபுரிய வேண்டும் என்ற லட்சியமும் இருந்துள்ளது.இதனால் இவர் தன்னுடைய மாமா ரோஹித் சர்மாவிடம் கிராபிக் டிசைனிங் பயிற்சியை முறையாக கற்றுள்ளார்.
இதுபற்றி மாணவன் ஹர்ஷித் சர்மா கூறுகையில் :
இதைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதால், பிரதமர் அலுவலகத்திலிருந்து 7,000 ரூபாய் பரிசுத் தொகை வந்தது, அதன்பின் பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்கள் உருவாக்கினேன். அது போன்ற சமயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்கு ஹர்ஷித் அனுப்பியுள்ளார். இவரின் போஸ்டர்கள் கூகுள் நிறுவனத்திற்கு பிடித்துப்போகவே, கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
இதனால் ஹர்ஷித் வரும் ஆகஸ்ட் மாதம் கலிபோர்னியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அவருக்கு உதவித்தொகையாக மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், பயிற்சிகாலம் நிறைவடைந்த பின்பு மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்