ஜி.எஸ்.டி., அமலானதை காரணம் காட்டி, வர்த்தகர்கள் கூடுதல் லாபம்
கேரள மாநிலத்தில், ஜி.எஸ்.டி., அமலுக்கு முன், கோழி மற்றும் கோழி தீவனத்திற்கு 14.5 சதவீத, 'வாட் வரி ' விதிக்கப்பட்டு இருந்தது. ஜூலை, 1ம் தேதி ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கறிக்கோழி, வரி ரத்து செய்யப்பட்டு 0% வரி போடப்பட்டது. அதாவது, வரி ஏதும் கிடையாது. இதனால் கறிக்கோழி விலை குறைந்து அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகரித்துள்ளது. இதனால் கோழிக்கு தட்டுப்பாடு அதிகரித்து, அதன் விலை, ஒரு கிலோ, 150 ரூபாய் வரை எகிறியுள்ளது. தற்போது இந்த செய்தியானது கேரளா அரசாங்கத்திற்கு தெரிந்து மாநில நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் கூறுகையில், '' ஜி.எஸ்.டி., அமலானதை காரணம் காட்டி, வர்த்தகர்கள் கூடுதல் லாபம் பார்க்க துவங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் திங்கட்கிழமை முதல், ஒரு கிலோ கறிக்கோழியை, 87 ரூபாய்க்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.
கேரள கோழி பண்ணை மற்றும் வர்த்தக சங்க நிர்வாகி கவிகுமார் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக அதிகமான கோழி விற்கப்பட்டுள்ளது. இதனால் கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகையால் விலை உயர்வாகியுள்ளது.குறைந்த விலைக்கு விற்பது சிரமமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
https://www.facebook.com/The-MALAR-198148963974802/?hc_ref=PAGES_TIMELINE&fref=nf

Comments
Post a Comment