உலகை திரும்பி பார்க்க வைத்தவர் 'மெலானி கெய்டஸ்'



உலகை திரும்பி பார்க்க வைத்தவர் மெலானி கெய்டஸ் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் மெலானி கெய்டஸ்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் மெலானி கெய்டஸ்(28). இவர் பிறக்கும் போதே எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு பிறந்துள்ளார். எக்டோடெர்மல் டிஸ்பிளேசியா என்றால் முடி வளராது, நகம் வளராது, பற்கள் உடைந்து போகும், தோல் துவாரங்கள் இருக்காது, இதனால் வியர்வை வெளியேறாது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்து காட்டுவது மிகப் பெரும் சிரமம். அதையெல்லாம் வென்று தான் சாதித்துள்ளார் மெலானி கெய்டஸ்.
தனது சிறுவயதிலே நோயின் தாக்கத்தை அறிந்து சாதிக்க துடித்தவர்.நியூயார்க்கில் உள்ள கல்லூரி ஒன்றில் கலை தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார்.அந்த நேரத்தில் மெலானி கெய்டஸ்க்கு புகைப்படம் ஒன்றிற்கு மொடலாக காட்சியளிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட மெலானி மடல் உலகிற்குள் காலடி வைத்துள்ளார்.இவர் மாடலிங்க் துறையில் தனக்கென்று தனி இடம் ஒன்றை பிடித்துவிட்டார்.

Published in மகளிர்

Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்