டாஸ்மாக் கடை வேண்டும் என போராட்டம் நடத்திய பெண்கள்!

டாஸ்மாக் கடை வேண்டும் டாஸ்மாக் கடை வேண்டும்


திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் சில நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் மதுபான கடை சமீபத்தில் திறக்கப்பட்டது, இந்த பகுதியை சுற்றி 2000க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.மேலும் இதன் அருகிலேயே கோயில்கள், பள்ளி மற்றும் கல்லூரியும் அமைந்துள்ளது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பழங்கரை மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதே சமயத்தில் அந்த டாஸ்மாக் மதுபான கடை அங்கேயே செயல்பட வேண்டும் என பெண்கள் உட்பட சிலர் பழங்கரை பெரியாயிபாளையம் பிரிவு என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களது கையில்,' வேண்டும் வேண்டும், டாஸ்மாக் வேண்டும் என்று எழுதப்பட்ட அட்டைகளும்'உள்ளன.
இதுகுறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மூடப்பட்டால், எங்கள் வீட்டு ஆண்கள் மது குடிப்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் தூரம் சென்று குடித்துவிட்டு அவர்கள் வீடு வந்து சேரும்வரை, நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படுகிறது, ஆதலால் டாஸ்மாக் நிர்வாகம் இந்த பழங்கரை மதுக்கடை தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.


Comments

Popular posts from this blog

தமிழ் செம்மொழி தினம் : கவிதை

முகப்பருக்களை போக்கும் கொத்தமல்லி!

ஃபேஸ்புக் முடங்கியதால் டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மார்க்